×

அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் திருவண்ணாமலை

திருவண்ணாமலை, மே 3: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் தீவிர பக்தர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதைக்கு மின்விளக்குகள் அமைத்து கொடுத்தது தொடங்கி, சமீபத்தில் லால்சலாம் படப்பிடிப்பை திருவண்ணாமலையில் நடத்தியபோது, கோயிலுக்கு வந்து தரிசனம செய்தது வரை என எப்போதும் அண்ணாமலையார் மீது பக்தி கொண்டவர். அவரை போலவே, அவரது மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், சவுந்தர்யா ரஜினிகாந்தும் அண்ணாமலையார் திருக்கோயிலின் தீவிர பக்தர்கள். புதிய படப்பிடிப்பு பணிகளை தொடங்கும் முன்பும், அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி, நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்தார். அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் வழியாக கோயிலுக்கு வந்த அவர், சம்மந்த விநாயகரை தரிசனம் செய்துவிட்டு, பின்னர் சுவாமி சனனதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, அம்மன் சன்னதி எதிரில் உள்ள நவகிரக சன்னதியை வலம் வந்து வழிபட்டார். நெய் தீபம் ஏற்றினார். பின்னர், கோயில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோயிலில் இருந்து புறப்பட்டு காரிலேயே கிரிவலம் சென்று வழிபட்டார். அவருடன், திரைப்பட உதவி இயக்குநர் முருகன் உடன் வந்திருந்தார். சவுந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே ரஜினி மாறுபட்ட வேடத்தில் நடித்த கோச்சடையான் திரைப்படத்தை இயக்கியவர். தற்போது, புதிய திரைப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

The post அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் திருவண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Soundarya Rajinikanth ,Swami Darshanam ,Annamalaiyar ,Temple ,Tiruvannamalai ,Rajinikanth ,Swami ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Krivalabathi ,Annamalaiyar Temple ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...